உயிரே என் ஆருயிரே
உயிரே என் ஆருயிரே
என் உயிரே உம்மை மறவேன்
உம் பாதம் சேர்ந்தேனே
என்னையே தொலைத்தேனே
உம் அன்பால் நிதம் நிதம்
என்னை தொலைத்தேனே
உம் அன்பின் மலரிலே
எந்நாளும் வாசம் நான்
அபிஷேக தென்றலிலே
மகிழ்ந்திடும் சோலை நான்
ஓ.. ஓ… என் சுவாசமே
ஓ..ஓ.. என் உயிர் மூச்சே
உம் மார்பில் சாய்ந்தாலே
என்னையே மறப்பேனே
உம் பாச நேசத்தால்
என்னை மறப்பேனே
உம் பாச மழையிலே
எந்நாளும் துளிகள் நான்
உம் பிரசன்ன காற்றிலே
மகிழ்ந்திடும் மனிதன் நான்
ஓ.. ஓ… என் சுவாசமே
ஓ..ஓ.. என் உயிர் மூச்சே