எந்தன் தாயின் வயிற்றில் உருவாகும் முன்னே
எந்தன் தாயின் வயிற்றில் உருவாகும் முன்னே
என்னை கருவில் கண்டவர் நீரே
இந்த உலக தோற்றத்திற்கும் முன்னே
என்னை தெரிந்து கொண்டவரும் நீரே
எந்தன் மீட்பர் நீரானதால்
நான் அசைக்கப்படுவதில்லை
எந்தன் மேய்ப்பர் நீரானதால்
குறை ஒன்றும் எனக்கில்லையே
எந்தன் சோதனை வேதனைகளின் பாதைகளில்
என்னை தாங்கி நடத்தினவரும் நீரே
எந்தன் துக்கங்களின் பாரங்களின் நேரங்களில்
என்னை தூக்கி சுமந்த தகப்பன் நீரே 
எந்தன் பயங்கள் கலக்கங்களின் வேளைகளில்
என்னை பாதுகாத்த புகலிடம் நீரே
எந்தன் கஷ்டங்களின் நஷ்டங்களின் வேளைகளில்
என்னை தேற்றி ஆற்றிய கன்மலை நீரே

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter