• waytochurch.com logo
Song # 22069

கலங்கிட வேண்டாம்

Kalangida Vendaam Enakaaga Oruvar Vol


கலங்கிட வேண்டாம் கலங்கிட வேண்டாம்
கர்த்தர் காப்பதால் கலங்கிட வேண்டாம்
இரவிலும் பகலிலும் கர்த்தர் உன்னை காக்கிறார்
அலையிலும் புயலிலும் உன்னை கரை சேர்க்கிறார்

கலங்கிட வேண்டாம் கலங்கிட வேண்டாம்
கர்த்தர் காப்பதால் கலங்கிட வேண்டாம்

அலேலுயா அலேலுயா அலேலுயா அலேலுயா

கோழி தன் குஞ்சுகளை பாதுகாத்து வளர்க்குது
கழுகையும் மிதித்து அனுதினமும் காக்குது

அது போல கர்த்தர் கரம் உன்னை தினம் காக்குது
ஆபத்து காலத்திலே அவரின் சத்தம் கேட்க்குது
உன்னை அவர் தேற்றுவார் காயங்கள் ஆற்றுவார்
சிரமங்கள் மாற்றுவார் சிகரத்தில் ஏற்றுவார்
நம்பிக்கையை இழக்காதே கர்த்தர் அருகில் இருக்கிறார்
நடந்ததை நினைக்காதே யுத்தம் உனக்காய் செய்கிறார்
கலங்கிட வேண்டாம் கலங்கிட வேண்டாம்
கர்த்தர் காப்பதால் கலங்கிட வேண்டாம்

தாய் தான் குழந்தைக்கு பாலுட்டிட மறப்பாளோ
பசியில் அழும் பொது அலட்சியமாய் இருப்பாளோ

யெஹோவா எல் ஷடாய் தாயை போல இருக்கிறார்
என்ன வேண்டும் கேளுங்கள் எல்லாம் உனக்கு தருகின்றார்
உடைகளை உடுத்துவார் உணவையும் ஊட்டுவார்
வறுமையை ஓட்டுவார் வாழ வழி காட்டுவார்
அனாதை நீயுமில்லை ஆண்டவரின் செல்லப் பிள்ளை
கலக்கங்கள் தேவையில்லை கர்த்தர் உண்டு பயமுமில்லை

கலங்கிட வேண்டாம் கலங்கிட வேண்டாம்
கர்த்தர் காப்பதால் கலங்கிட வேண்டாம்
இரவிலும் பகலிலும் கர்த்தர் உன்னை காக்கிறார்
அலையிலும் புயலிலும் உன்னை கரை சேர்க்கிறார்
கலங்கிட வேண்டாம் கலங்கிட வேண்டாம்
கர்த்தர் காப்பதால் கலங்கிட வேண்டாம்




                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com