Maatri Maatri Rev Vijay Aaron
மாற்றி மாற்றி அமைத்தார்
என் வாழ்வை மாற்றி அமைத்தார்
சிங்காரமாக மாற்றினாரே
ஊற்றி ஊற்றி நிறைத்தார்
சந்தோஷம் ஊற்றி நிறைத்தார்
மகிழ்ச்சியாலே நிரப்பினாரே
கண்ணை பார்க்க செய்தார்
என் செவியை கேட்கச் செய்தார்
மகிழ்ச்சியாலே நிரப்பினாரே-2
அப்பா என்றும் நல்லவரே
1.இரக்கமும் மனதுருக்கமும்
கிருபையும் அவர் சாந்தமும்-2
கோபம் என் மேல் கொள்ளாமல்
சாபம் என்மேல்(என்னில்) சாயாமல்
லாபமாக மாற்றினாரே-2
என் அப்பா என்றும் நல்லவரே
2.நம்பினேன் என் தகப்பனை
விசுவாசித்தேன் அவர் வார்த்தையை-2
நிந்தையெல்லாம் நீக்கினார்
சிந்தையெல்லாம் மாற்றினார்
உள்ளம் எல்லாம் தேற்றினாரே-2
என் அப்பா என்றும் நல்லவரே-மாற்றி