சன்ஜலம் தீர்க்கும் இறைவன்
Chayalam Thirkum Iraivan K J Yesudas
சன்ஜலம் தீர்க்கும் இறைவன்
என் தலைவன்
என்னுள்ளம் வாழும் முதல்வன் (X2)
தத்தளிக்கும் சேற்றில் என்னை தூக்கியவன்
இன்னலை துடைத்து என்னை தேற்றியவன்
இது போதுமே எனக்கு என்ன வேண்டும்
சன்ஜலம் தீர்க்கும் இறைவன்
என் தலைவன்
என்னுள்ளம் வாழும் முதல்வன்
துன்பங்கள் சூழும் நேரமெல்லாம்
என் கால்கள் உன்னை தேடி ஓடும் (X2)
கண்ணீருக்குள் எந்தன் வாழ்வு இருந்திட்ட போதும் (X2)
உன்னோடு உறவாடும் உறவு ஒன்றே போதும்
சன்ஜலம் தீர்க்கும் இறைவன்
என் தலைவன்
என்னுள்ளம் வாழும் முதல்வன்
இதயத்தில் உன் வார்த்தை நிறைந்ததினால்
நிறைவான இன்பங்கள் கூடும் (X2)
உயிருக்குள் உயிராக நீர் வந்த போதும் (X2)
நீர் வேறு நான் வேறு வேதங்கள் ஏது
சன்ஜலம் தீர்க்கும் இறைவன்
என் தலைவன்
என்னுள்ளம் வாழும் முதல்வன்
தத்தளிக்கும் சேற்றில் என்னை தூக்கியவன்
இன்னலை துடைத்து என்னை தேற்றியவன்
இது போதுமே எனக்கு என்ன வேண்டும்
சன்ஜலம் தீர்க்கும் இறைவன்
என் தலைவன்
என்னுள்ளம் வாழும் முதல்வன்