அர்ப்பணித்தேன் என்னையே இயேசுவே
Arpanithaen Ennaiyae Yesuvae
அர்ப்பணித்தேன் என்னையே இயேசுவே –உம்
அன்புப்பலிப் பீடத்திலே தியாகமாகுவேன் –2
உன் பாதையிலே பயணமாகுவேன்
உண்மைக்கான சாட்சியாய் வாழ்ந்திடுவேன்
வாழ்ந்திடுவேன் நான் வாழ்ந்திடுவேன்
உள்ளங்கள் உயர்ந்துவாழ உம்மோடு பாடுபட
என்னை எந்நாளும் அளிக்கின்றேன் –2
இதய உணர்வுகள் இன்ப ராகங்கள் –2
எல்லாம் உந்தன் பணிக்கு என அர்ப்பணிக்கின்றேன்
வாழ்வுக்குப் போராடும் உள்ளங்களில்
வளர்ந்தே வலுவூட்ட விழைகின்றேன் –2
வாழ்க்கைப் பலியிலே என்னையே தந்து –2
தளர்ச்சி நீக்கி வளர்ச்சி காண வழியுமாகுவேன்