• waytochurch.com logo
Song # 22136

ஞானியாய் சுற்றித்திரிந்தாலும்

Gnaaniyaai Sutri Thirinthaalum Giftson Durai


ஞானியாய் சுற்றித்திரிந்தாலும்
பேரோடு புகழை சேர்த்தாலும்
அரண்மனைகள் கட்டினாலும்
மனதில் ஏக்கம் தீராதே
சாலொமோன் ராஜா ஆனாலும்
சகலமும் உன் வசம் என்றாலும்
கொஞ்சம் நீ உற்றுப்பார்த்தால்
எதுவும் நிரந்தரம் கிடையாது

வாழ்வு சாவு எது வந்தாலும்
தேவனோடு மனம் கொண்டாடும்
கொண்டு வந்ததில்லை
கொண்டும் போவதில்லை
சேர்த்து வைப்பதில் பயனில்லை
ஆசை நூறு நீ கொண்டாலும்
தேவன் நினைத்தாலே கை கூடும்
ஒன்றும் கூட்டவோ ஒன்றும் குறைக்கவோ
உனக்கு வழி இல்லை எந்நாளும்

ஞானி இங்கு தேவன் இல்லை
செல்வன் ஏழை வேறு இல்லை
நாளை என்பது கையில் இல்லை
இங்கு எல்லாமே மாயை என்றும்
வாழ்வில் அர்த்தம் சேர்க்கும் வரை
ஓட்டம் இங்கு ஓய்வதில்லை
வாழ்க்கை வாழும் அனைவருக்கும்
தேவன் உறுதுணையே என்றும்

இருக்கும் வரை இன்பங்கள் சேர்த்திடலாம்
இயேசுவுடன் துயரங்கள் பகிர்ந்திடலாம்
துணிச்சலுடன் துன்பங்கள் அகற்றிடலாம்
கடல் எனும் கண்ணீர் கடந்திடலாம்
இருக்கும் வரை இன்பங்கள் சேர்த்திடலாம்
இயேசுவுடன் துயரங்கள் பகிர்ந்திடலாம்
துணிச்சலுடன் துன்பங்கள் அகற்றிடலாம்
இது போதும் என்றே நினைத்திடலாம்
-வாழ்வு சாவு




                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com