• waytochurch.com logo
Song # 22139

Ungal Kai உங்கள் கை

உங்கள் கை
உங்கள் கை
{உங்கள் கை உங்களை பாவத்தில் விழச் செய்தால்
அதை வெட்டி விடு வெட்டி விடு
வெட்டி எறிந்து விடு!} (X2)
{இரு கையோடு நரகத்தில் தள்ளப்படுவதை விட} (X2)
{ஒரு கையோடு வான்வீட்டில் புகுவது நலமே} (X2)
சின்னஞ் சிறுவரை பாவத்தில் விழச்செய்யும் உங்களுக்கு
ஐயோ கேடு! ஐயோ கேடு!
பிறரையும் பாவத்தில் விழச்செய்யும் உங்களுக்கு
ஐயோ கேடு! ஐயோ கேடு!

உங்கள் கண்
உங்கள் கண்
{உங்கள் கண் உங்களை பாவத்தில் விழச் செய்தால்
அதை பிடுங்கி விடு பிடுங்கி விடு
பிடுங்கி எறிந்து விடு!} (X2)
இரு கண்ணோடு நரகத்தில் தள்ளப்படுவதை விட (X2)
ஒரு கண்ணோடு வான்வீட்டில் புகுவது நலமே (X2)
சின்னஞ் சிறுவரை பாவத்தில் விழச்செய்யும் உங்களுக்கு
ஐயோ கேடு! ஐயோ கேடு!
பிறரையும் பாவத்தில் விழச்செய்யும் உங்களுக்கு
ஐயோ கேடு! ஐயோ கேடு!

உங்கள் நண்பன்
உங்கள் நண்பன்
{உங்கள் நண்பன் உங்களை பாவத்தில் விழச் செய்தால்
அவனை விட்டு விடு விட்டு விடு
அவனை விட்டு ஓடி விடு} (X2)
{கெட்ட நண்பனோடு நரகத்தில் தள்ளப்படுவதை விட} (X2)
{நல்ல நண்பரோடு வான்வீட்டில் புகுவது நலமே} (X2)
சின்னஞ் சிறுவரை பாவத்தில் விழச்செய்யும் உங்களுக்கு
ஐயோ கேடு! ஐயோ கேடு!
பிறரையும் பாவத்தில் விழச்செய்யும் உங்களுக்கு
ஐயோ கேடு! ஐயோ கேடு!

உங்கள் பணம்
உங்கள் பணம்
{உங்கள் பணம் உங்களை பாவத்தில் விழச் செய்தால்
அதை கொடுத்து விடு கொடுத்து விடு
ஏழைக்கு கொடுத்துவிடு} (X2)
{பெரும் செல்வந்தனாய் நரகத்தில் தள்ளப்படுவதை விட} (X2)
{வெறும் எளியோராய் வான்வீட்டில் புகுவது நலமே}(X2)
சின்னஞ் சிறுவரை பாவத்தில் விழச்செய்யும் உங்களுக்கு
ஐயோ கேடு! ஐயோ கேடு!
பிறரையும் பாவத்தில் விழச்செய்யும் உங்களுக்கு
ஐயோ கேடு! ஐயோ கேடு!

உங்கள் பதவி
உங்கள் பதவி
{உங்கள் பதவி உங்களை பாவத்தில் விழச்செய்தால்
அதை இழந்து விடு இழந்து விடு
அடியோடு இழந்து விடு} (X2)
{பெரும் பதவியோடு நரகத்தில் தள்ளப்படுவது விட} (X2)
{நற்பணி செய்து வான்வீட்டில் புகுவது நலமே} (X2)
சின்னஞ் சிறுவரை பாவத்தில் விழச்செய்யும் உங்களுக்கு
ஐயோ கேடு! ஐயோ கேடு!
பிறரையும் பாவத்தில் விழச்செய்யும் உங்களுக்கு
ஐயோ கேடு! ஐயோ கேடு!

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com