இலேசான காரியம்
Ilaesaana Kaariyam
இலேசான காரியம் – எதுவும்
இலேசான காரியம்
பெலமுள்ளவன் – பெலனற்றவன்
யாராயிருந்தாலும் உதவிகள் செய்வது
இலேசான காரியம்
உமக்கது இலேசான காரியம். 
மண்ணை பிசைந்து மனிதனை படைப்பது
இலேசான காரியம்
மண்ணான மனிதர்க்கு மன்னாவை தருவதும்
இலேசான காரியம்
கூழாங்கல்லாலே கோலியாத் வீழ்ந்தது
இலேசான காரியம்
ஆழ்கடல் மீன் அதில் வரிப்பணம் பெறுவதும்
இலேசான காரியம்
கற்பாறை போலே கடல்மேல் நடப்பது
இலேசான காரியம்
கற்சாடி நீரை கனிரசமாக்குதல்
இலேசான காரியம் – இயேசுவுக்கு 

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter