Kannin Maniye Deepika Youth Sam கண்ணின் மணியே
கண்ணின் மணியே கலங்காதே
கர்த்தர் உன்னை அழைக்கின்றார்
கருணை கடலாம் இயேசு
அன்பாய் உன்னை அணைப்பார்
பாவபாரதால் நொந்த உள்ளதில்
கண்ணீர் கவலை சூழும்
உள்ளம் ஒடிந்து சாக துடித்து
ஓடும் மனிதா நில்
தேடு தேடு இறைவனை நீ
உந்தன் பாவ விடுதலைக்கு
மாறும் உந்தன் வாழ்க்கை
கவலை இனி ஏன் உனக்கு
அன்பால் அணைப்பார் உன்னை
அன்பர் பாதம் போற்று
அப்பமானவர் ரத்தமானவர்
புசித்தால் ருசித்தால் தெரியும்
ஜீவ தண்ணீரை பருகி பாரதை
தணியும் ஆத்ம தாகம்
சேரு சேரும் மந்தையில் நீ
பாரில் உன்னை காத்திடுவார்
அவரே உன் பட்சம் வந்தால்
வாழ்க்கை இனிதாய் மாறும்
அன்பால் அணைப்பார் உன்னை
அன்பர் பாதம் போற்று
கண்ணின் மணியே கலங்காதே
கர்த்தர் உன்னை அழைக்கின்றார்
கருணை கடலாம் இயேசு
அன்பாய் உன்னை அணைப்பார்