இரக்கம் நிறைந்தவரே என் இயேசு
Irakam Niranthavare En Yesu
இரக்கம் நிறைந்தவரே
என் இயேசு ராஜனே
எண்ணில்லா அதிசயங்கள் எண்ணில்லா அற்புதங்கள்
என் வாழ்வில் செய்தவரே
எண்ணி எண்ணி நான் பாடுவேன்
ஒவ்வொன்றாய் சொல்லி பாடுவேன்
சிறுமையும் எளிமையுமான என்னை
என்றும் நினைப்பவரே
தாயாய் தந்தையாய் இஸ்ரவேலின் தேவனே
என்னை நடத்துகின்றீர்
வனாந்திரம் வறட்சியுமான என் வாழ்வை
என்றும் காண்பவரே
ஆகாரின் கதறலுக்கு இரங்கின என் தேவன்
எனக்கும் இரங்கினீரே
தனிமையுமான வெறுமையுமான என் வாழ்வில்
துணையாய் வந்தீரையா
ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மை கிருபை
என்னை தொடர்ந்திடுமே