• waytochurch.com logo
Song # 22241

கதிரவன் தோன்றும் காலையிதே

Kathiravan Thontum Kaalaiyithae


கதிரவன் தோன்றும் காலையிதே
புதிய கிருபை பொழிந்திடுதே – நல்
துதி செலுத்திடுவோம் இயேசுவுக்கே
கதிரவன் தோன்றும் காலையிதே

1. வான சுடர்கள் கானக ஜீவன்
வாழ்த்திடவே பரன் மாட்சிமையே
காற்று பறவை ஊற்று நீரோடை
கர்த்தருக்கே கவி பாடிடுதே

2. காட்டில் கதறி கானக ஓடை
கண்டடையும் வெளி மான்களை போல்
தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீராம்
தற்பரன் யேசுவை தேடிடுவோம்

3. காலை விழித்தே கர்த்தரின் சாயல்
கண்களும் செவியும் காத்திருக்கும்
பாதம் அமர்ந்து தேவனை ருசித்து
கீதங்கள் பாடியே மகிழ்ந்திடுவேன்




                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com