• waytochurch.com logo
Song # 22242

jepam seythiduvom kannnneer sinthiduvom ஜெபம் செய்திடுவோம் கண்ணீர் சிந்திடுவோம்


ஜெபம் செய்திடுவோம் கண்ணீர் சிந்திடுவோம்
தேசத்தின் ஷேமத்திற்காய்

ஜெபிப்போம் செயல் படுவோம்
ஜெபிப்போம் ஜெயம் பெறுவோம்

அதிகாலையில் இராச்சாமத்தில் பகலில் இரவில்
இடைவிடாமல் எப்பொழுதுமே
– ஜெபம்

1. ஜெபத்தினால் சாத்தான் ஓடிப்போவான்
ஜெபத்தினால் எதிர்ப்புகள் மறைகின்றன
ஜெபத்தினால் ஜெபத்தினால்
ஜெபிப்போம் கொடுப்போம்
விரைந்து செயல்படுவோம்
— ஜெபம்

2. கங்கை நதியினிலே மூழ்கிடும் மக்களைப் பார்
புண்ணிய ஷேத்திரங்களில் கும்பிடும் ஜனங்களைப் பார்
கவலைப்படுவார் யார்? கண்ணீர் சிந்துவார் யார்?
நம்மில் யார் யார் யாரோ?
திறப்பிலே யார், யார் யாரோ?
— ஜெபம்

3. சிதருண்டலைகின்ற இந்துக்கள் முஸ்லீம்கள்
மேய்ப்பனற்றவராய் ஜைனர்கள் பௌத்தர்கள்
ஆயிரம் பதினாயிரம் லட்சம் கோடி உண்டே
கெத்சமனேக்கு விரைந்து சென்றிடுவோம்
கண்ணீர் சிந்தி கதறி ஜெபித்திடுவோம்
— ஜெபம்

4. பெலத்தின்மேல் பெலன் பெருகிடும்
கிருபையின்மேல் கிருபை பெருகிடும்
ஜெபத்தினால் ஜெபத்தினால்
காத்திருந்து சுதந்தரிப்போம் (2)
— ஜெபம்



Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com