குதூகலம் நிறைந்த நன்னாள்
Kuthookalam Niraintha Nannaal
குதூகலம் நிறைந்த நன்னாள்
நடுவானில் மின்னிடுமே
இதுவரை இருந்த துன்பமில்லை
இனி என்றுமே ஆனந்தம்
1. தள கர்த்தனாம் இயேசு நின்று
யுத்தம் செய்திடுவார் நன்று
அவர் ஆவியினால் புது பெலனடைந்து
ஜெயகீதங்கள் பாடிடுவோம்
— குதூகலம்
2. புவி மீதினில் சரீர மீட்பு
என்று காண்போம் என ஏங்கும்
மன மகிழ்ந்திடவே அவர் வந்திடுவார்
மணவாட்டியாய்ச் சேர்த்திடவே
— குதூகலம்
3. ஜெப விழிப்புடன் வாஞ்சையாக
அவர் வருகையை எதிர் நோக்கி
நவ எருசலேமாய் தூயாலங்கிர்தமாய்
நாம் ஆயத்தமாகிடுவோம்
— குதூகலம்
4. ஜீவ ஒளி வீசும் கற்களாக
சீயோன் நகர்தனிலே சேர்க்க
அருள் சுரந்திருந்தார் நாமம் வரைந்திருந்தார்
அவர் மகிமையில் ஆர்ப்பரிப்போம்
— குதூகலம்
5. தேவ தூதர்கள் கானமுடன்
ஆரவார தொனி கேட்கும்
அவர் கிருபையினால் மறுரூபமாக
நம்மை இனிதுடன் சேர்த்திடுவார்
— குதூகலம்