• waytochurch.com logo
Song # 22282

மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு

Manavaalvu Puvi Vaalvinil Vaalvu


மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு
மங்கள வாழ்வு வாழ்வினில் வாழ்வு
மருவிய சோபன சுப வாழ்வு

1. துணை பிரியாது, தோகையிம்மாது
சுப மண மகளிவர் இதுபோது
மனமுறை யோது வசனம் விடாது
வந்தனர் உமதருள் பெறவேது
– நல்ல

2. ஜீவ தயாகரா, சிருஷ்டியதிகாரா
தெய்வீக மாமண அலங்காரா
தேவ குமாரா திருவெல்லைய்யூரா
சோந்தவர்க்கருள் தரா திருப்பீரா?
– நல்ல

3. குடித்தன வீரம், குணமுள்ள தாரம்
கொடுத்துக் கொண்டாலது சமுசாரம்
அடக்கமாசாரம், அன்பு, உதாரம்
அம்புவி தனில் மனைக்கலங்காரம்
– நல்ல

4. மன்றல் செய் தேவி, மணாளனுக்காவி
மந்திரம் அவர் குறையுமே தாவி
மன்றியிப் புவி யமர்ந்த சஞ்சீவி
அவளையில்லாதவ னொரு பாவி
– நல்ல




                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com