மனிதனின் ஆலோசனை வீணானது
Manidhanin Aalosanai Veenanadhu
மனிதனின் ஆலோசனை வீணானது
தேவனின் ஆலோசனை மேலானது
1. நடந்திடும் என்று மனிதன் கூறுவான்
தேவன் நிறுத்தி வைப்பார்
நிறுத்துவோம் என்று மனிதன் கூறினால்
தேவன் நடத்தி வைப்பார்
2. அறிவினால் உன் பெலத்தினால்
நடத்திட முடியாது
ஜெபத்தினால் அவர் கிருபையால்
நடக்கும் தவறாது
3. இதைச் செய்வேன் நான் அதைச் செய்வேன்
மனதிலே எண்ணம் உனக்கு
நடந்ததும் இனி நடப்பதும்
இறைவன் மனக்கணக்கு