மரணம் வருது உன் முடிவும் வருது மரிக்கும் முன்னே
Maranam Varuthu Un Mudivum
மரணம் வருது
உன் முடிவும் வருது
மரிக்கும் முன்னே
மனந்திரும்பு
1. சொத்துபத்து சேர்த்தது போதும்
சொகுசாக வாழ்ந்தது போதும்
சோம்பேறியாய் இருந்தது போதும்
மனந்திரும்பு..
வேதவாக்கு நிறைவேறும் காலம்
வேதனைகள் ஆரம்பிக்கும் காலம்
வேகமாக தேவன் வரும் நேரம்
மனந்திரும்பு மனந்திரும்பு
மனந்திரும்பு மனந்திரும்பு
2. ஆதியிலே கொண்ட அன்பை மறந்தாய்
பாதியிலே வழிதப்பி நடந்தாய்
உண்மையான ஊழியத்தை துறந்தாய்
மனந்திரும்பு
அவனவன் செயலுக்கு தக்கதாய்
அவனவனுக்கு தேவன் தருவார்
தண்டனைக்கு தப்பித்திட நினைத்தால்
மனந்திரும்பு மனந்திரும்பு
மனந்திரும்பு மனந்திரும்பு
3. ரட்சிப்புக்கு நாள் குறித்திடாதே
இன்றுதானே ரட்சணிய நாளே
காலம் போனால் மீண்டும் வந்திடாதே
மனந்திரும்பு
ஆவி உன்னை பிரிந்திடும் முன்னே – நீ
பாவியென்று பரன் சொல்லும் முன்னே
லேவியனாய் மாறிவிட நினைத்தால்
மனந்திரும்பு மனந்திரும்பு
மனந்திரும்பு மனந்திரும்பு