முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் நேசிக்கிறார்
Mukamalarnthu Kotuppavarai Karththar
முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் நேசிக்கிறார்
உற்சாக மனதுடனே கொடுத்திடுவோம்
1. வருத்தத்தோடல்லää கட்டாயத்தாலல்ல
இருப்பதை விருப்பமுடன்ää கொடுத்திடுவோம்
விதை விதைத்திடுவோம் அறுவடை செய்வோம்
2. அதிகமாய் விதைத்தால்ää அதிக அறுவடை
ஏழ்மை நிலையிலிருந்து இன்றே விடுதலை
அளவின்றி கொடுத்துää செல்வர்களாவோம்
அமுக்கி குலுக்கி மடியில் அளந்து போடுவார்
3. ஏழைக்கு இரங்கி கொடுக்கும் போதெல்லாம்
கர்த்தருக்கு கடன் கொடுத்து திரும்ப பெற்றிடுவோம்
எந்த நிலையிலும் தேவையானதெல்லாம்
எப்போதும் நமக்கு தந்திடுவாரே
4. நற்செயல் செய்ய வேண்டிய அனைத்தும்
மிகுதியாகவே தந்திடுவாரே
எல்லா நன்மைகளால் நிரப்ப வல்லவர்
குறைகளை நிறைவாக்கி நடத்திடுவார்