• waytochurch.com logo
Song # 22306

அழகே என் அழகே

Azhagae En Azahgae


அழகே என் அழகே, அழகே என் அழகே
அதிகாலை வெண்பனியின் அழகே-2
பாசமுள்ள சாரோன் ரோஜா அழகே-2
புது வாக்குத்தத்தம் தந்த என் அழகே-2

பள்ளத்தாக்கின் லீலிபுஷ்ப அழகே
என் பரிசுத்த ரூபமான அழகே
சாலமோனைத் துதிக்க வைத்த அழகே
பல சங்கீதங்கள் பொங்க வைத்த அழகே
அழகே என் அழகே
மலர்தோட்டமெல்லாம் மயங்குகின்ற அழகே
அழகே என் அழகே
குயில் கூட்டமெல்லாம் பாடுகின்ற அழகே

தாவீதை ஏங்க வைத்த அழகே
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திச்சென்ற அழகே
அழகெல்லாம் பிரமிக்கின்ற அழகே
ஆவி அபிஷேக தைலம் பூசும் அழகே

அழகே என் அழகே
அந்த கடல்மீது நடந்து வந்த அழகே
அழகே என் அழகே
அந்த கல்வாரியில் பூபூத்த அழகே




                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com