• waytochurch.com logo
Song # 22307

Naam Aaraathikum Devan Nallavar நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்


நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்
விடுவிக்க வல்லவரே (2)
எரிகின்ற அக்கினிக்கும் ராஜாவிற்கும்
விடுவிக்க வல்லவரே (2)

1. நம்மை காக்கின்றவர்
தூதரை அனுப்பிடுவார்
அக்கினி ஜுவாலையிலே
அவியாமல் காத்திடுவார்
இடைவிடாமல் ஆராதிப்போம்
நம் வாழ்வில் என்றும் ஜெயமே (2)

2. நம்மை அழைத்தவரோ
கைவிடவே மாட்டார்
கலங்காமல் முன் சென்றிட
கரம் பற்றி நடத்திடுவார்
இடைவிடாமல் ஆராதிப்போம்
நம் வாழ்வில் என்றும் ஜெயமே (2)

3. சத்துருவின் கோட்டைகளை
தகர்த்திட உதவி செய்வார்
தயங்காமல் முன்சென்றிட
தாங்கியே நடத்திடுவார்
இடைவிடாமல் ஆராதிப்போம்
நம் வாழ்வில் என்றும் ஜெயமே (2)




                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com