• waytochurch.com logo
Song # 22354

anpile puranare அன்பிலே பூரணரே எங்கள் ஆனந்த ரூபா அதிசய ராஜா


அன்பிலே பூரணரே - எங்கள் ஆனந்த ரூபா அதிசய ராஜா
அழகில் சிறந்தோனே - எங்கள் ஆசையின் கோமானே
அஹா அஹா ஆனந்தம் அஹா அஹா ஆனந்தம் அன்னியராம் -அழைத்தணைத்தீரே

சரணங்கள்

1. காத்தீரே கருணையுடன் - எம் கலக்கங்கள் நீக்கி கனிவுடன் தூக்கி
கதியில்லா ஏழைகளின் பெரும் கவலைகளைப் போக்கி
அஹா அஹா ஆனந்தம் அஹா அஹா ஆனந்தம்
ஆறுதல் அளித்தீர் அனுதினம் துதிப்பேன் - அன்பிலே

2. ஆனந்தம் ஆனந்தமே - உம் ஆருயிர் ஈந்தீர் அவனியில் வந்தீர்
அலகைதனை வென்றீர் - அவன் அடிமைகளை மீட்டீர்
அஹா அஹா ஆனந்தம் அஹா அஹா ஆனந்தம்
அல்லேலூயா பாடி அகமகிழ்ந்திடுவோம் - அன்பிலே

3. கோடையில் குளிர் தருவே - கடும் வாடையின்- மறைவே ஏழையின் உறவே
கூடுவோம் திருப்பாதம் - தினம் பாடுவோம் அவர் கீதம்
அஹா அஹா ஆனந்தம் அஹா அஹா ஆனந்தம்
அன்பே, அன்பே, அன்னையின் மேலாய் - அன்பிலே

4. நித்திய பரிசுத்தரே - உம் வருகையில் அடியாரைப் பரிசுத்தம் செய்யும்
உத்தம் ஜீவிகளாய் - நல் நித்திய வாழ்வினிலே
அஹா அஹா ஆனந்தம் அஹா அஹா ஆனந்தம்
அல்லேலூயா கீதம் பாடி மகிழ்வோம் - அன்பிலே

5. தோத்திரம் துதியுமக்கே - தேவா அன்பின் ஆழம் அறிந்து புகழ்வோம்
ஆயத்தமுள்ளோர்க்கே - நீர் அருணோதயமாவீர்
அஹா அஹா ஆனந்தம் அஹா அஹா ஆனந்தம்
ஆ! ஆனந்தம் அல்லேலூயா பாடி - அன்பிலே

Posted on
  • title
  • Name :
  • E-mail :
  • Type

© 2019 Waytochurch.com