• waytochurch.com logo
Song # 22355

lyecuvin necattal un ullam இயேசுவின் நேசத்தால் உன் உள்ளம் பொங்குதே


இயேசுவின் நேசத்தால் உன் உள்ளம் பொங்குதே
அவ்வன்பின் மாட்சிமை அறிவுக் கெட்டுமோ

அனுபல்லவி

ஆ! என்ன ஆழமே இயேசுவின் நேசமே
அதன் தியானமே ஜீவிய பாக்கியமே

சரணங்கள்

1. லோகமுண்டாகுமுன் என்னையும் கண்டாரே
லோகத்தில் வந்து தன் ஜீவனைத் தந்தாரே
உன்னத அழைப்பால் தன்னோடு தங்கிட
என்னைத் தகுதியாய் எண்ணிய நேசமே - இயேசுவின்

2. சீயோனில் எனக்காய் மூலைக்கல்லாகியே
சீயோனில் என்னையும் சேர்த்தொன்றாய் கட்டியே
மேலோக நாதரின் வேலையை முடித்த
மேலான சிற்பியாம் ஏசுவின் நேசமே - இயேசுவின்

3. உன்னத அன்பென்னும் ஒப்பற்ற ஈவினால்
தன்னைப்போல் என்னையும் தெய்வீகமாக்குவார்
சத்துருவா மெனைத் தம் சொந்தமாக்கிய
உத்தமர் ஏசுவின் உன்னத நேசமே - இயேசுவின்

4. மணவாளன் இயேசுவின் மங்கள நாளதில்
மணவாட்டி கூட்டத்தில் மாபாவி சேர்ந்திட
கொடிய பாடுகள் குரூர யூதரால்
காரணமின்றியே சகித்த நேசமே - இயேசுவின்

5. ஜீவ கிரீடமும் ஜோதியாம் அங்கியும்
நீதியின் செங்கோலும் தரித்து வாழ்ந்திட
முள்முடி அணிந்து நிந்தையும் சகித்த
மன்னாதி மன்னனின் மாறாத நேசமே - இயேசுவின்

6. மீட்பின் சங்கீதங்கள் சீயோனில் பாடுவேன்
மேலோக தூதரும் அப்பாடல் பாடிடார்
கல்வாரிக் குன்றின்மேல் கை காலறையுண்ட
கர்த்தாதி கர்த்தரின் காதல் என் கீதமே -இயேசுவின்

Posted on
Comments
Write Comment
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2022 Waytochurch.com