பரமண்டலங்களில் வீற்றிருக்கும்
Paramaṇṭalaṅkaḷil virrirukkum paramapithave
பரமண்டலங்களில் வீற்றிருக்கும்பரமபிதாவே, எந்நாளும்பரிசுத்தப்படூக உம் நாமம்.பரிவுடன் வருக உம் ராச்சியம்பரலோகத்தில் உமது சித்தம்பண்புடன் செய்யப்படுவது போல்தரணியிலுமது சித்தமுமேதவறாது செய்யப்படுக சதா.அன்றன்றுள்ள எம் ஆகாரம்அன்புடன் எங்களுக்கீந்தருளும்நன்றயலார் கடன் யாம் மன்னிக்கும்நன்னயம் போலெம் பிழை மன்னியும்தேவ சோதனைக் கெமை விலக்கிதீமையினின்றெமை இரட்சியுமே, மேவும்ராச்சியம், வல்லலை, மகிமை மிகவும்உமதென்றுமே ஆமேன்.