மறவாதவர் கைவிடாதவர்
Ma?avathavar kaivi?hathavar ennai
மறவாதவர் கைவிடாதவர்
என்னை தம் உள்ளங்கையில்
வரைந்து வைத்தவர்
உம் அன்பொன்றே மாறாதய்யா
உம் அன்பொன்றே மறையாதய்யா
உங்க அன்பில் மூழ்கணும்
உம் நிழலில் மறையணும்
தீங்கு நாளில் என்னை கூடாரமறைவில்
ஒளித்து என்னை பாதுகாத்து
கன்மலையில் நிறுத்தினீர்
ஆனந்த பலிகளை செலுத்தி
கர்த்தரை நான் பாடிடுவேன்
எனக்காய் யாவும் செய்து முடிக்கும்
அன்பை நான் துதித்திடுவேன்
கர்த்தாவே நீர் என்னை
ஆராய்ந்து அறிகிறீர்
என் நினைவும் என் வழியும்
உமக்கு மறைவாக இல்லையே
உம்முடைய ஆவிக்கு மறைவாய்
எங்கோ நான் போவேனோ
உம்முடைய சமுகத்தை விட்டு
எங்கே நான் ஓடிடுவேன்
எங்கும் நிறைந்த எலோஹிம் நீர்
உம் அன்பில் மகிழ்ந்திடுவேன்