• waytochurch.com logo
Song # 22376

சரித்திரத்தை இரண்டாய் பிளந்தவராம்

Carittirattai ira??hay pi?anthavaram


சரித்திரத்தை இரண்டாய் பிளந்தவராம்
கிறிஸ்த்தேசு பிறந்தாரே,
தீர்க்கனின் வார்த்தை நிறைவேற
தாழ்மையாய் உதித்தாரே
தொழுவம் தான் எந்தன் பெருமகனின்
ஏழ்மையின் மாழிகையோ,
புல்லணையில் தவழும் அதிபனுக்கு
பாடுவேன் ஆரீரோ

ஆடுங்கள் கொண்டாடுங்கள் நம்
இறைவன் பிறந்தார் இன்று
பாடுங்கள் பண் பாடுங்கள்
நம் இறைவன் உதித்தார் இன்று (X2)

1, மேய்ப்பர்கள் கலங்கிட
வானிலே உதித்தாரே வேந்தன்,
தாவீதின் ஊரிலே புல்லணை
தவழ்வாரே ராஜன்,
தூதன் வார்த்தை கேட்ட மந்தை மேய்ப்பர்,
அங்கு பணிந்து போற்றவே விரைந்தார்,
மந்தையோடு சென்ற மந்தை மேய்ப்பர்
நம் பாலன் இயேசுவை பணிந்தார் ,
பொன்போளம் தூபம் கொண்டு ஞானி பணிந்தார்
ஊரெங்கும் பாலன் புகழ் பாடி மகிழ்ந்தார்
-ஆடுங்கள் கொண்டாடுங்கள்

2. உலகத்தின் இருளினை மாற்றிட
ஒளியானார் தேவன்
மனிதர்க்கு ஒளியினை காட்டிட
மனுவானார் ராஜன்
தன்னை தானே பலியாக தருவார்
நமக்காக சிலுவையில் மரிப்பார்
சாகாமை கொண்ட எங்கள் மீட்ப்பர்,
பாவ சாவை வெல்லவே ஜெனித்தார்
மண்மீது மாட்சி தோன்ற மானிடனானார்
மாசில்லா இறைவன் மண்ணில் மகிபனானார்

-ஆடுங்கள் கொண்டாடுங்கள்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com