எங்கே போவேன்
Enge Povaen David Selvam
எங்கே போவேன் நான்
எந்தன் இயேசுவே
யாரிடம் சொல்வேன் நான்
எந்தன் பாரத்தை
ஆற்றவும் தேற்றவும்
உம்மை போல யாருண்டு
அன்பு காட்டவும் அரவணைக்கவும்
உம்மை தவிர எவருண்டு
நீரே எந்தன் தஞ்சம்
தயவு காட்டுமே
கிருபை தாருமே
1.உந்தன் அன்பை உணராமல்
நாங்கள் செய்த தவறுகள்
எண்ணிலடங்காதே
அதை எழுத முடியாதே-2
ஆனாலும் மன்னித்தீர் மன்னித்தீர்
தயவாய் என்னை மன்னித்தீர்-ஆற்றவும்
2.என் கண்கள் உம்மை தேடுதே
கரங்கள் கூப்பி அழைக்குதே
அன்பு தேவனே
என் அருகில் வாருமே-2
என்னையும் தேற்றுவீர் தேற்றுவீர்
அன்பாய் என்னை தேற்றுவீர்
3.உம் வார்த்தை இன்று தாருமே
என் வழியை நீர் காட்டுமே
எந்தன் தேவனே(இயேசுவே) என் அன்பு நண்பனே-2
நித்தமும் நடத்துவீர் நடத்துவீர்
கனிவாய் என்னை நடத்துவீர்-ஆற்றவும் 

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter