Neenka Poethum Iyae நீங்க போதும் இயேசப்பா
நீங்க போதும் இயேசப்பா
உங்க சமூகம் எனக்கப்பா
1. எத்தனை இன்பமே உந்தன் சமூகமே
உள்ளமும் உடலுமே உமக்காய் ஏங்குதே – என்
2. புதுபெலன் தருகிறீர் புது எண்ணேய் பொழிகிறீர்
கனிதரும் மரங்களாய் செழித்தோங்கச் செய்கிறீர் – நான்
3. அப்பா உம் சந்நிதியில் எப்போ நான் வந்து நிற்பேன்
திருமுகம் கண்டு நான் திருப்தியில் மூழ்குவேன் – உம்
4. தேனிலும் இனிமையே தெவிட்டாத அமுதமே
தேடியும் கிடைக்காத ஒப்பற்ற செல்வமே – நான்