• waytochurch.com logo
Song # 22431

பூமியின் மனிதர்களே மன்னவனை துதியுங்கள்

Poomiyin Manitharkalae Mannavanai


பூமியின் மனிதர்களே மன்னவனை துதியுங்கள்
பறவைகளே பரிசுத்தராம் பரமனை துதியுங்கள்

1. வானாதி வானங்களே வானவரை துதியுங்கள்
மழையின் மேகங்களே மேலோனை துதியுங்கள்
ராஜாதி ராஜாவை கர்த்தாதி கர்த்தாவை
கருத்துடன் துதியுங்கள் — பூமியின்

2. தென்றல் காற்றுகளே தேவனை துதியுங்கள்
தாரணி மனிதர்களே தம்பிரானை துதியுங்கள்
தாசர்கள் போற்றும் தன்னிகர் அற்றவனை
என்றென்றும் துதியுங்கள் — பூமியின்

3. கர்த்தரின் ஜனங்களே கர்த்தாவை துதியுங்கள்
கர்த்தர் செய்த நன்மைகளை நினைத்து துதியுங்கள்
கண்களை கவர்ந்திடும் இயற்கை காட்சிகளை
படைத்தோனை துதியுங்கள் — பூமியின்




                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com