orumanamaai koodi osanna paadi ஒருமனமாய் கூடி ஓசன்னா பாடி
ஒருமனமாய் கூடி ஓசன்னா பாடி
ஊரெல்லாம் பறைசாற்றுவோம்
எங்கள் மகா ராஜன் இயேசு ஒரே தேவன்
கன மகிமை புகழ் பாடுவோம் -2
அவர் நல்லவர் வல்லவர் போதுமானவர்
அவர் அற்புதம் அதிசயம் மகிமை உள்ளவர் – 2
1. பரம தேவன் எங்கள் பாவங்களை
இயேசு ரத்தத்தினால் சுத்தமாக்கினாரே -2
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
ஆனந்த தொனியோடு ஆர்ப்பரிப்போம்
2. கட்டுகளும் சாப தீட்டுகளும்
இயேசு நாமத்தினால் நிர்மூலமாகிற்றே – 2
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
ஆனந்த தொனியோடு ஆர்ப்பரிப்போம்