Manithan Kathavai Adaippaan மனிதன் கதவை அடைப்பான்
மனிதன் கதவை அடைப்பான் என் தேவன் அதனை திறப்பார் – 2
மனிதன் வாக்கு மாறும் என் தேவன் வாக்கு மாறார் – 2
நம்பி வா மகனே நம்பி வா!
நம்பி வா மகளே நம்பி வா!
1. பெயர் சொல்லி அழைத்தவனையும் கரம் பற்றி நடத்தினாரே
கொடுத்த வாக்கின் படி விடுதலை தந்தாரே -2
உன்னையும் அழைத்தவர் உண்மை உள்ளவர் – 2
ஒருநாளும் உன்னை மறந்திட மாட்டார் – மனிதன் கதவை
2. ஆடுகள் மேய்த்தவனையும் அபிஷேகம் செய்தாரே
ஆகாதவனையும் அரசனாய் மாற்றினாரே – 2
உன்னையும் மாற்றுவார் உருக்கம் உள்ளவர் – 2
உயர்த்தி மகிழ்வார் இரக்கம் உள்ளவர் – மனிதன் கதவை
3. பகையாய் இருந்தவனையும் சீஷனாய் மாற்றினாரே
உலகத்தை கலக்குகின்ற உத்தமனாய் உயர்த்தினாரே -2
இயேசு நல்லவர் உனக்கும் வல்லவர் – 2
உன்னையும் மன்னித்து இன்றே உயர்த்துவார் – மனிதன் கதவை
manithan kathavai ataippaan en thaevan athanai thirappaar – 2
manithan vaakku maarum en thaevan vaakku maaraar – 2
nampi vaa makanae nampi vaa!
nampi vaa makalae nampi vaa!
1. peyar solli alaiththavanaiyum karam patti nadaththinaarae
koduththa vaakkin pati viduthalai thanthaarae -2
unnaiyum alaiththavar unnmai ullavar – 2
orunaalum unnai maranthida maattar – manithan kathavai
2. aadukal maeyththavanaiyum apishaekam seythaarae
aakaathavanaiyum arasanaay maattinaarae – 2
unnaiyum maattuvaar urukkam ullavar – 2
uyarththi makilvaar irakkam ullavar – manithan kathavai
3. pakaiyaay irunthavanaiyum seeshanaay maattinaarae
ulakaththai kalakkukinta uththamanaay uyarththinaarae -2
yesu nallavar unakkum vallavar – 2
unnaiyum manniththu inte uyarththuvaar – manithan kathavai