• waytochurch.com logo
Song # 2267

இயேசுவை நாம் எங்கே காணலாம்





இயேசுவை நாம் எங்கே காணலாம்

பல்லவி

இயேசுவை நாம் எங்கே காணலாம்

அவர் பேசுவதை எங்கே கேட்கலாம்




அனுபல்லவி

பனி படர்ந்த மலையின் மேல் பாக்க முடியுமா ?

கனி நிறைந்த சோலையின் நடுவே காண முடியுமோ ?




சரணங்கள்

1. ஓடுகின்ற அருவியெல்லாம் தேடி அலைந்தேனே

ஆடுகின்ற அலைகடலில் நாடி அயர்ந்தேனே

தேடுகின்ற என் எதிரே தெய்வத்தைக் காணேனே

பாடுபடும் ஏழை நான் அழுது வாடினேனே --- இயேசுவை




2. வானமதில் பவனி வரும் கார்முகில் கூட்டங்களே

வந்தருளும் இயேசுவையே காட்டிட மாட்டீரோ

காலமெல்லாம் அவனியின்மேல் வீசிடும் காற்றே நீ

கர்த்தர் இயேசு வாழுமிடம் கூறிட மாட்டாயோ --- இயேசுவை




3. கண்ணிரண்டும் புனலாக நெஞ்சம் அனலாக

மண்டியிட்டு வீழ்ந்தேன் நான் திருமறைமுன்பாக

விண்ணரசர் அன்புடனே கண்விழிப்பாய் என்றார்

கண்விழித்தேன் என் முன்னே கர்த்தர் இயேசு நின்றார் --- இயேசுவை



                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com