Vizhiyae Kalangaathe விழியே கலங்காதே
விழியே கலங்காதே
விடியும் திகையாதே
மனதின் வலி மெய் தானே
மறையும் சோராதே
கண்ணீரையும் அவர் காண்பாரே
மனதுருகி அருகே வருவாரே
தோளின் மேலே உன்னை சாய்ப்பாரே
உன்னை மூடி மறைப்பாரே
மனமே நீ கலங்காதே
விடியும் திகையாதே
உயிரே என்பாரே
உதவி செய்வாரே
1.கண்ணீரால் இரவுகளை
கடந்தாயோ உடைந்தாயோ !
தனிமையில் துணையில்லையே
என்றாயோ ஏங்கினாயோ !
கண்ணீர் துடைத்திடுவாரே
கவலை மாற்றிடுவாரே
விலகாத நிழல் அவர் தானே
பாதை திறந்திடுவாரே
2.பிறர் சொல்லும் வார்த்தைகளால்
இடிந்தாயோ சரிந்தாயோ !
தீராதா சுமைகளினால்
அமிழ்ந்தாயோ புதைந்தாயோ !
சுமையை நீ சுமக்காதே
சுமக்க அவர் இருக்காரே
மகனே என்றழைப்பாரே
இறுக அணைத்துக்கொள்வாரே
மனமே நீ கலங்காதே
விடியும் திகையாதே
உயிரே என்பாரே
உதவி செய்வாரே
viliyae kalangaathae
vitiyum thikaiyaathae
manathin vali mey thaanae
maraiyum soraathae
kannnneeraiyum avar kaannpaarae
manathuruki arukae varuvaarae
tholin maelae unnai saayppaarae
unnai mooti maraippaarae
manamae nee kalangaathae
vitiyum thikaiyaathae
uyirae enpaarae
uthavi seyvaarae
1.kannnneeraal iravukalai
kadanthaayo utainthaayo !
thanimaiyil thunnaiyillaiyae
entayo aenginaayo !
kannnneer thutaiththiduvaarae
kavalai maattiduvaarae
vilakaatha nilal avar thaanae
paathai thiranthiduvaarae
2.pirar sollum vaarththaikalaal
itinthaayo sarinthaayo !
theeraathaa sumaikalinaal
amilnthaayo puthainthaayo !
sumaiyai nee sumakkaathae
sumakka avar irukkaarae
makanae entalaippaarae
iruka annaiththukkolvaarae
manamae nee kalangaathae
vitiyum thikaiyaathae
uyirae enpaarae
uthavi seyvaarae