உன்னையும் என்னையும்
உன்னையும் என்னையும்
1. உன்னையும் என்னையும் இரட்சிக்கவே
இயேசு தம் ஜீவனை ஈந்தனரே
குருசில் கண்டேன் (2) என் இயேசுவை
2. பாவத்தின் தோஷத்தை மன்னிக்கவே
பரன் தம் இரத்தத்தைச் சிந்தினாரே
குருசில் கண்டேன் (2) என் இயேசுவை
3. மன்னிப்பும் மோட்சமும் அடைந்திட
நானே வழி சத்தியம் ஜீவன் என்றார்
சோர்ந்திடாதே நம்பியேவா
நிச்சயம் நேசர் ஏய்றுக்கொள்வார்
4. இயேசு உன்னை அன்பாய் அழைக்கிறார்
அவரை நீ இன்று ஏற்றுக்கொள்வாய்
அழைக்கிறார் (3) அன்புடனே
5. இரட்சகர் பாதம் நீ பற்றிக்கொண்டால்
நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வாய்
அல்லேலூயா (3) ஆமென்

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter