Varumaiya Swami Varumaiya வாருமையா சுவாமி வாருமையா
பல்லவி
வாருமையா சுவாமி வாருமையா – இப்போ
தேவ ஆவியை ஊற்ற வாருமையா!
சரணங்கள்
1. பெந்தெகொஸ்தென்னும் நாளில் வல்லமையாக வந்தீர்!
சொந்தப் பிள்ளைகள் கூடிக் கெஞ்சும் இவ்வேளைதனில் – வாருமையா
2. மூவாயிரம் பாவிகள் மேலும் நீர் வந்திறங்கி,
தேவா உம் வல்லமையைக் காட்டினாற் போல இப்போ! – வாருமையா
3. முன்னோர்க்கு ஆவியை நீர் அற்புதமாகத் தந்தீர்
நன்மை மூலனே இப்போ தாரும் தவிக்கிறோமே! – வாருமையா
4. நின்று யுத்தம் செய்யவே உண்மையாய் ஏவுமையா!
தன்னயத்தையே கொன்று முன்னே நடத்துமையா! – வாருமையா
pallavi
vaarumaiyaa suvaami vaarumaiyaa – ippo
thaeva aaviyai ootta vaarumaiyaa!
saranangal
1. penthekosthennum naalil vallamaiyaaka vantheer!
sonthap pillaikal kootik kenjum ivvaelaithanil – vaarumaiyaa
2. moovaayiram paavikal maelum neer vanthirangi,
thaevaa um vallamaiyaik kaattinaar pola ippo! – vaarumaiyaa
3. munnorkku aaviyai neer arputhamaakath thantheer
nanmai moolanae ippo thaarum thavikkiromae! – vaarumaiyaa
4. nintu yuththam seyyavae unnmaiyaay aevumaiyaa!
thannayaththaiyae kontu munnae nadaththumaiyaa! – vaarumaiyaa