Vallaal Ummai Theadi வள்ளால் உம்மைத் தேடி
பல்லவி
வள்ளால் உம்மைத் தேடிதேடி வாறேனையனே!
அனுபல்லவி
தள்ளாடும் என் நெஞ்சைத் தேற்றி
தாங்கும் மெய்யனே
சரணங்கள்
1. என்மேல் கொண்ட உமது நேசம் என்ன நேசமோ!
இந்நேசமே என்னை உம்மோடிழுக்கும் நேசமோ! – வள்
2. ஐயா! உம்மையல்லாதெனக்கு ஆரும் வேண்டாமே
மெய்யா யுமதண்டை நித்திய ஜீவனுண்டாமே! – வள்
3. அப்பா! உம்மை அடைய எனக்கு ஆசை பொங்குதே
அடைவேனென நம்பி எந்தனாவி தங்குதே! – வள்
4. தந்தேனெனை உந்தனுக்குச் சொந்தமாகவே;
வந்தே எனதுள்ளந்தனில் வசியுமென் கோவே! – வள்
pallavi
vallaal ummaith thaetithaeti vaaraenaiyanae!
anupallavi
thallaadum en nenjaith thaetti
thaangum meyyanae
saranangal
1. enmael konnda umathu naesam enna naesamo!
innaesamae ennai ummotilukkum naesamo! – val
2. aiyaa! ummaiyallaathenakku aarum vaenndaamae
meyyaa yumathanntai niththiya jeevanunndaamae! – val
3. appaa! ummai ataiya enakku aasai ponguthae
ataivaenena nampi enthanaavi thanguthae! – val
4. thanthaenenai unthanukkuch sonthamaakavae;
vanthae enathullanthanil vasiyumen kovae! – val