Yuththam Entrum Seivean யுத்தம் என்றும் செய்வேன்
பல்லவி
யுத்தம் என்றும் செய்வேன் நித்தம் பேயை வெல்வேன்;
சுத்தமாய் என்றும் ஜீவிப்பேன் கர்த்தன் சக்திகொண்டே!
சரணங்கள்
1. எத்தனை சோதனை – பித்தன் பேய் சோதித்தும்
அத்தனையும் நான் ஜெயித்தே பக்தியாய் பாடுவேன் – யுத்தம்
2. முந்தின பக்தரை – சோதித்தாற் போலவே
எந்த வேஷத்தில் வந்தாலும் அஞ்சிடவே மாட்டேன் – யுத்தம்
3. சோதித்தான் ஸ்வாமியை – வாதித்தான் யோபுவை
சாத்தான் போ வென்றே குருசில் காத்திருப்பேனே – யுத்தம்
4. தீர்க்கமாய் முன் சென்று – ஊக்கமாய் படையில்
தூக்கமில்லா உற்சாகமாய் நான் ஊழியம் செய்வேன் – யுத்தம்
5. இயேசுவை நம்பியே – நேசத்தைக் காட்டியே
நாசத்தை விட்டு நீங்கியே தாசராய் ஜீவிப்போம் – யுத்தம்
pallavi
yuththam entum seyvaen niththam paeyai velvaen;
suththamaay entum jeevippaen karththan sakthikonntae!
saranangal
1. eththanai sothanai – piththan paey sothiththum
aththanaiyum naan jeyiththae pakthiyaay paaduvaen – yuththam
2. munthina paktharai – sothiththaar polavae
entha vaeshaththil vanthaalum anjidavae maattaen – yuththam
3. sothiththaan svaamiyai – vaathiththaan yopuvai
saaththaan po vente kurusil kaaththiruppaenae – yuththam
4. theerkkamaay mun sentu – ookkamaay pataiyil
thookkamillaa ursaakamaay naan ooliyam seyvaen – yuththam
5. yesuvai nampiyae – naesaththaik kaattiyae
naasaththai vittu neengiyae thaasaraay jeevippom – yuththam