• waytochurch.com logo
Song # 23006

Munne Sareera Vaithiyanaam முன்னே சரீர வைத்தியனாம்


முன்னே சரீர வைத்தியனாம்
லூக்காவைத் தேவரீர்
ஆன்மாவின் சா நோய் தீர்க்கவும்
கர்த்தாவே, அழைத்தீர்
ஆன்மாவின் ரோகம் நீக்கிடும்
மெய்யான வைத்தியரே
உம் வார்த்தையாம் மருந்தினால்
நற்சுகம் ஈயுமே
கர்த்தாவே, பாவக் குஷ்டத்தால்
சா வேதனையுற்றோம்
உம் கரத்தால் தொட்டருளும்
அப்போது சுகிப்போம்
ஆன்மாக்கள் திமிர்வாத்தால்
மரித்துப் போயினும்
நீர் வல்ல வாக்கைக் கூறுங்கால்
திரும்ப ஜீவிக்கும்
துர் ஆசை தீய நெஞ்சிலே
தீப்போல காயினும்
உம் சாந்த சொல்லால் கோஷ்டத்தை
தணிய செய்திடும்
எத்தீங்கும் நீக்கும், இயேசுவே
நற்பாதம் அண்டினோம்
உம் பூரண கடாட்சத்தால்
சுத்தாங்கம் பெறுவோம்

munnae sareera vaiththiyanaam
lookkaavaith thaevareer
aanmaavin saa nnoy theerkkavum
karththaavae, alaiththeer
aanmaavin rokam neekkidum
meyyaana vaiththiyarae
um vaarththaiyaam marunthinaal
narsukam eeyumae
karththaavae, paavak kushdaththaal
saa vaethanaiyuttaோm
um karaththaal thottarulum
appothu sukippom
aanmaakkal thimirvaaththaal
mariththup poyinum
neer valla vaakkaik koorungaal
thirumpa jeevikkum
thur aasai theeya nenjilae
theeppola kaayinum
um saantha sollaal koshdaththai
thanniya seythidum
eththeengum neekkum, yesuvae
narpaatham anntinom
um poorana kadaatchaththaal
suththaangam peruvom


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com