Mudinthathendru Ninaitha Valvai முடிந்ததென்று நினைத்த வாழ்வை
1. முடிந்ததென்று நினைத்த வாழ்வை
துவங்கி விட்டவரே
மூழ்கிக்கொண்டிருந்த என்னை
தூக்கி விட்டவரே
முடங்கி கிடந்த என்னை துள்ளி
குதிக்க வைத்தவரே
முடிக்க நினைத்த எதிரியின்முன்
வாழ வைத்தவரே.
நன்றி நன்றி என் இயேசு ராஜா
நன்றி நன்றி என் இயேசு ராஜா
2. கண்ணின் மணிபோல் என்னை மூடி
காத்துக் கொண்டவரே
கண்ணீர் யாவும் கரங்கள் கொண்டு
துடைத்து விட்டவரே
கரத்தை பிடித்து என்னை தினமும்
நடத்திச் செல்பவரே
கண்ணே மணியே என்று என்னை
அணைத்துக் கொண்டவரே.
நன்றி நன்றி என் இயேசு ராஜா
நன்றி நன்றி என் இயேசு ராஜா
3. உடைந்து கிடந்த என்னை எடுத்து
வனைந்து கொண்டவரே
உதறி தள்ளப்பட்ட என்னை
சேர்த்துக் கொண்டவரே
உதிரத்தாலே என்னை கழுவி
சுத்தம் செய்தவரே – உம்
உம்மோடு என்னை அழைத்துச் செல்ல
மீண்டும் வருவீரே.
நன்றி நன்றி என் இயேசு ராஜா
நன்றி நன்றி என் இயேசு ராஜா
1. mutinthathentu ninaiththa vaalvai
thuvangi vittavarae
moolkikkonntiruntha ennai
thookki vittavarae
mudangi kidantha ennai thulli
kuthikka vaiththavarae
mutikka ninaiththa ethiriyinmun
vaala vaiththavarae.
nanti nanti en yesu raajaa
nanti nanti en yesu raajaa
2. kannnnin mannipol ennai mooti
kaaththuk konndavarae
kannnneer yaavum karangal konndu
thutaiththu vittavarae
karaththai pitiththu ennai thinamum
nadaththich selpavarae
kannnnee manniyae entu ennai
annaiththuk konndavarae.
nanti nanti en yesu raajaa
nanti nanti en yesu raajaa
3. utainthu kidantha ennai eduththu
vanainthu konndavarae
uthari thallappatta ennai
serththuk konndavarae
uthiraththaalae ennai kaluvi
suththam seythavarae – um
ummodu ennai alaiththuch sella
meenndum varuveerae.
nanti nanti en yesu raajaa
nanti nanti en yesu raajaa