• waytochurch.com logo
Song # 23033

மாமலைமீதினில் போதகம்

Maamalai Meethinil


மாமலைமீதினில் போதகம் கூறும் மாமேதை
இயேசுவின் கனிமொழி கேட்பாய் (2)
சிந்திய முத்துக்கள் சிந்தனை செய்வாய்
புண்ணியர் போதனை உள்ளத்தில் ஏற்பாய்
1.ஆவியில் எளியவர் பாக்கியவான்கள் ஆண்டவர் ராஜ்யம் அடைந்திடுவார் (2)
துயரப்படுவோர் பாக்கியவான்கள் தேவனின் ஆறுதல் அடைந்திடுவார் (2) -மாமலைமீதினில்
2.பொறுத்திடும் மாந்தர்கள் பாக்கியவான்கள் பூமியை என்றும் சுதந்தரிப்பார் (2)
நீதியைக் காப்பவர் பாக்கியவான்கள் கர்த்தரின் திருப்தி அடைந்திடுவார் (2)-மாமலைமீதினில்
3.கர்த்தரில் நிந்தனை ஏற்பவர்கள் கர்த்தரில் மகிழ்ச்சி அடைந்திடுவார் (2)
பலன்கள் மிகுதி பெற்றிடுவார் பரமனின் ராஜ்யம் அடைந்திடுவார் (2)-மாமலைமீதினில்

maamalaimeethinil pothakam koorum maamaethai
yesuvin kanimoli kaetpaay (2)
sinthiya muththukkal sinthanai seyvaay
punnnniyar pothanai ullaththil aerpaay
1.aaviyil eliyavar paakkiyavaankal aanndavar raajyam atainthiduvaar (2)
thuyarappaduvor paakkiyavaankal thaevanin aaruthal atainthiduvaar (2) -maamalaimeethinil
2.poruththidum maantharkal paakkiyavaankal poomiyai entum suthantharippaar (2)
neethiyaik kaappavar paakkiyavaankal karththarin thirupthi atainthiduvaar (2)-maamalaimeethinil
3.karththaril ninthanai aerpavarkal karththaril makilchchi atainthiduvaar (2)
palankal mikuthi pettiduvaar paramanin raajyam atainthiduvaar (2)-maamalaimeethinil


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com