Masattra Deva Suthanae மாசற்ற தேவ சுதனே
1. மாசற்ற தேவ சுதனே!
உம்மண்டை நானிப்போ வாறேன்;
விலங்கை நீக்கி விடுமேன்!
தேவே! தஞ்சமென்றேன்
பல்லவி
பாவம் போக்கும் மீட்பா! (2)
மாசற்ற தேவ சுதனே!
பாவம் போக்கும் மீட்பா!
2. பசியினால் என் ஆத்துமம்
தொய்ந்து வாடி அலையுதே!
உம் அன்பினால் என்னைத் தாங்கும்
பாவியின் நேசரே! – பாவம்
3. உட் பாவத்தால் மெலிகிறேன்
உள் வினையை நீர் நீக்குமேன்
துக்கத்தோடு ஜெபிக்கிறேன்
சமாதானம் தாரும்! – பாவம்
4. மீட்பா உந்தன் ஜீவாற்றினுள்
மெய் விசுவாசத்துடனே
மூழ்குவதால் என் உள்ளத்துள்
மகிழ் கொள்ளுகிறேன் – பாவம்
1. maasatta thaeva suthanae!
ummanntai naanippo vaaraen;
vilangai neekki vidumaen!
thaevae! thanjamenten
pallavi
paavam pokkum meetpaa! (2)
maasatta thaeva suthanae!
paavam pokkum meetpaa!
2. pasiyinaal en aaththumam
thoynthu vaati alaiyuthae!
um anpinaal ennaith thaangum
paaviyin naesarae! – paavam
3. ut paavaththaal melikiraen
ul vinaiyai neer neekkumaen
thukkaththodu jepikkiraen
samaathaanam thaarum! – paavam
4. meetpaa unthan jeevaattinul
mey visuvaasaththudanae
moolkuvathaal en ullaththul
makil kollukiraen – paavam