Manu Sutha Em Veera மனு சுதா எம் வீரா
1. மனு சுதா, எம் வீரா, வல்ல அன்பா!
உம் தொண்டரே இப்பாரில் தீரராம்;
எம் இன்பம் துன்பம் சகிக்கும் மா நண்பா!
உமக்கு நாங்கள் ஜீவ பலியாம்.
2. மா கஷ்ட பாதை சென்றீர் தேவரீரே,
சத்திய வார்த்தை நீர் அருளினீர்;
அன்போடு காட்டுப் புஷ்பம் வியந்தீரே,
வாலிபர் வீரம் கண்டே மகிழ்ந்தீர்.
3. பாலியர் போதகா, இளைஞர் நேசா!
மாந்தரின் வேந்தர் ஊழியனும் நீர்;
நம்பிக்கை ஆறுதல் இன்பத்தின் நாதா!
எம் நோக்கம் இன்பம் பயம் ஆளுவீர்.
4. ஆறுதல் ஈயும் அன்பரை அண்டுவோம்,
எம்மோடிரும் எம் தோல்வி துன்பிலும்;
செல்வர் விருந்தா! இன்பத்தில் வேண்டுவோம்!
இல்லார் நல் தோழா, தாழ்வில் தங்கிடும்.
1. manu suthaa, em veeraa, valla anpaa!
um thonndarae ippaaril theeraraam;
em inpam thunpam sakikkum maa nannpaa!
umakku naangal jeeva paliyaam.
2. maa kashda paathai senteer thaevareerae,
saththiya vaarththai neer arulineer;
anpodu kaattup pushpam viyantheerae,
vaalipar veeram kanntae makilntheer.
3. paaliyar pothakaa, ilainjar naesaa!
maantharin vaenthar ooliyanum neer;
nampikkai aaruthal inpaththin naathaa!
em nnokkam inpam payam aaluveer.
4. aaruthal eeyum anparai annduvom,
emmotirum em tholvi thunpilum;
selvar virunthaa! inpaththil vaennduvom!
illaar nal tholaa, thaalvil thangidum.