Paaviyae Thunakintha Perumai பாவியே துனக்கிந்தப் பெருமை
பல்லவி
பாவியே துனக்கிந்தப் பெருமை – நமது
பரம குரு இராஜன் எடுத்தாரே சிறுமை!
சரணங்கள்
1. தேவாதி தேவ குமாரன் – உன்னைத்
தேடிவந்தே அவர் தாழ்மையானாரே! – பாவியே
2. பெரியோர்கள் வீடாசித்தாரோ? இல்லை
சிறியதோர் பசுத்தொழுவிலுதித்தாரே! – பாவியே
3. இராஜாதி இராஜ குமாரன் – பொல்லா
நீசருக்காக அடிமையானாரே! – பாவியே
4. நியாயாசனங்கள் முன்னின்று – வெகு
தாழ்மையாய் மறுமொழியுரைத்து நின்றாரே! – பாவியே
5. நீதிபரனான இயேசு – அநீத
வீதி பெற்றுக் குருசில் மாண்டாரே! – பாவியே
6. நாயகன் இயேசுவை அண்டு – மா
நேயராம் அவரிடம் இரட்சிப்பு உண்டு! – பாவியே
pallavi
paaviyae thunakkinthap perumai – namathu
parama kuru iraajan eduththaarae sirumai!
saranangal
1. thaevaathi thaeva kumaaran – unnaith
thaetivanthae avar thaalmaiyaanaarae! – paaviyae
2. periyorkal veedaasiththaaro? illai
siriyathor pasuththoluviluthiththaarae! – paaviyae
3. iraajaathi iraaja kumaaran – pollaa
neesarukkaaka atimaiyaanaarae! – paaviyae
4. niyaayaasanangal munnintu – veku
thaalmaiyaay marumoliyuraiththu nintarae! – paaviyae
5. neethiparanaana yesu – aneetha
veethi pettuk kurusil maanndaarae! – paaviyae
6. naayakan yesuvai anndu – maa
naeyaraam avaridam iratchippu unndu! – paaviyae