• waytochurch.com logo
Song # 23247

paavi manathurukae பாவி மனதுருகே


பல்லவி
பாவி, மனதுருகே!
அனுபல்லவி
ஆ[1] வீட்டில் ஏர்[2] காட்டு தேவாட்டுக்குப்-பாவி
சரணங்கள்
1. மாது தின்ற கனிவினை போக, மனுடர் வடிவமாக – நம்
வல்லமைப் பிதாவின் மைந்தன் புல்லதில் பிறந்தார்; அந்தோ! – பாவி
2. வேத வாசகப்படி நெறிகாட்ட, வேதாளக்குடி ஓட்ட,-இதோ!
வித்தகத் திரித்துவ ஏகத் தத்துவ சொரூபன் வந்தார்.- பாவி
3. விந்தைத் திருமுதல் நரர் உரு உவந்தார்,
கந்தைத் துணி அணிந்தார்; – இப்படி
மெத்தனவ ராகக் கரி சித்துனைப் புரக்க வந்தார். – பாவி
4. மேட்டிமையைத் துறந்தார், காட்டினிடை சிறந்தார்.
மேன்மை அனைத்தும் மறந்தார்; – இந்த
விந்தைக் கோலத் துன்னைக் கண்டு சந்திக்க வந்திருக்கிறார். – பாவி
5. நெரிந்த நாணலை முறியார், பொரிந்த திரியை அவியார்
நிர்ப்பந்தர் தமைப்பிரியார்; – இவர்
நீதிமான்களை அல்ல, உன்னைப்போல் பாதகரைத் தான் தேடி வந்தார் – பாவி

pallavi
paavi, manathurukae!
anupallavi
aa[1] veettil aer[2] kaattu thaevaattukkup-paavi
saranangal
1. maathu thinta kanivinai poka, manudar vativamaaka – nam
vallamaip pithaavin mainthan pullathil piranthaar; antho! – paavi
2. vaetha vaasakappati nerikaatta, vaethaalakkuti otta,-itho!
viththakath thiriththuva aekath thaththuva soroopan vanthaar.- paavi
3. vinthaith thirumuthal narar uru uvanthaar,
kanthaith thunni anninthaar; – ippati
meththanava raakak kari siththunaip purakka vanthaar. – paavi
4. maettimaiyaith thuranthaar, kaattinitai siranthaar.
maenmai anaiththum maranthaar; – intha
vinthaik kolath thunnaik kanndu santhikka vanthirukkiraar. – paavi
5. nerintha naanalai muriyaar, porintha thiriyai aviyaar
nirppanthar thamaippiriyaar; – ivar
neethimaankalai alla, unnaippol paathakaraith thaan thaeti vanthaar – paavi

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com