Paavi Paavi Vanthu Ippo பாவி பாவி வந்து இப்போ
பல்லவி
பாவி பாவி வந்து இப்போ பாவம் போக்காயோ? நீ உன்
சாவின் பயம் நீங்க இப்போ ஓடி வாராயோ?
சரணங்கள்
1. சத்திய வழியிலே நீ சார்ந்து வாராயோ? – நித்தம்
புத்தியாய்ப் பிழைத்துப் பின்பு மோட்சம் போகாயோ? – பாவி
2. சத்துரு எதிர்த்து உன்னைச் சீறினபோதும் – சர்வ
கர்த்தரின் உதவியுனக் கென்றுமே போதும் – பாவி
3. பாவத்தை அறிக்கை செய்து மீட்படைவாயே – அப்போ
சாகுங்காலம் வந்தாலுமே தயார் என்பாயே – பாவி
pallavi
paavi paavi vanthu ippo paavam pokkaayo? nee un
saavin payam neenga ippo oti vaaraayo?
saranangal
1. saththiya valiyilae nee saarnthu vaaraayo? – niththam
puththiyaayp pilaiththup pinpu motcham pokaayo? – paavi
2. saththuru ethirththu unnaich seerinapothum – sarva
karththarin uthaviyunak kentumae pothum – paavi
3. paavaththai arikkai seythu meetpataivaayae – appo
saakungaalam vanthaalumae thayaar enpaayae – paavi