Paava Paaril Unnatha Samaathanam பாவப்பாரில் உன்னத சமாதானம்
பாவப்பாரில் உன்னத சமாதானம்
பல்லவி
பாவப்பாரில் உன்னத-சமாதனம்
தேவ வாக்கிதுவல்லோ?
சரணங்கள்
1.பாவி உன்தனுக்கிந்த ஓவிய வாக்கை யீந்த
பாவநாசர் யேசுரத்தம் ஆறுதலைப் பேசுஞ் சத்தம். – பா
2.கடுத்தவேலை கூடவே வருத்தந்தொல்லை நீடவே
கர்த்தரின் சித்தந்தனைக் கருத்தாய்ச்செய்வ தாறுதல். – பா
3.உறவர் நம் முற்ற நேசர் புறமொதுங்கினும் யேசு
உறங்காது யாவரையும் உரமாய் அரவணைப்பார் – பா
4.வருங்காலான வைகளும் மரணகாலவிருளும்
அறவே நம் யேசுவேந்தர் அருளுவர் சமாதானம் – பா
5.பரமானந்தமே ஓங்கும் தரணித்துன்பமும் நீங்கும்
பரலோகச் சமாதானப் பரவசம் ஆகுவோம் நாம். – பா
paavappaaril unnatha samaathaanam
pallavi
paavappaaril unnatha-samaathanam
thaeva vaakkithuvallo?
saranangal
1.paavi unthanukkintha oviya vaakkai yeentha
paavanaasar yaesuraththam aaruthalaip paesunj saththam. – paa
2.kaduththavaelai koodavae varuththanthollai needavae
karththarin siththanthanaik karuththaaychcheyva thaaruthal. – paa
3.uravar nam mutta naesar puramothunginum yaesu
urangaathu yaavaraiyum uramaay aravannaippaar – paa
4.varungaalaana vaikalum maranakaalavirulum
aravae nam yaesuvaenthar aruluvar samaathaanam – paa
5.paramaananthamae ongum tharanniththunpamum neengum
paralokach samaathaanap paravasam aakuvom naam. – paa