Paarkka Manam Varuvean பார்க்க முனம் வருவேன்
பல்லவி
பார்க்க முனம் வருவேன்;-நெருக்கத்தில்
பத்ரமாகத் கரிசித்த மேசியாவை.
அனுபல்லவி
ஆர்க்கும் இரங்கும் பராபரனின் சுதன்
அன்பின் மனுடவ தாரத்தைச் சிந்தித்து – பார்
1.நிச்சய சாதரண சத்திய வேதனை
நின்மல ஞான வரப்பிரசாதனை
உச்சித வாக்ய சுவிசேட போதனை
உன்னத ரட்சகர் கிறிஸ்தேசு நாதனை
2.முற்பிதாக்கள் விரும்பிய தேட்டம்
முன்னே ஆதிப்பிதாவின் சிரேட்டம்
எப்பு விக்கும் எவர்க்கும் கொண்டாட்டம்
எந்தையின் சுதன்மேல் என்றன் நாட்டம்
3.ஆசைக் கிறிஸ்துண்மை யானதால் நல் ஆயனை
ஆத்தும நாயகர் ஆன என்நேயனை
பாச வலையில் கை தூக்கின நாயனை
பக்ஷ மொடு காத்த முக்ய சகாயனை
4.ஆச்சரியமான நேசத்தைப் பாசத்தை
அன்பின் திருமுகத்தை,ஐந்து காயத்தை
காட்சி தரும் இரு பாதத்தைப் பாவியைக்
கைதூக்கி விட்ட கரத்தை, உரித்தாக
pallavi
paarkka munam varuvaen;-nerukkaththil
pathramaakath karisiththa maesiyaavai.
anupallavi
aarkkum irangum paraaparanin suthan
anpin manudava thaaraththaich sinthiththu – paar
1.nichchaya saatharana saththiya vaethanai
ninmala njaana varappirasaathanai
uchchitha vaakya suviseda pothanai
unnatha ratchakar kiristhaesu naathanai
2.murpithaakkal virumpiya thaettam
munnae aathippithaavin siraettam
eppu vikkum evarkkum konndaattam
enthaiyin suthanmael entan naattam
3.aasaik kiristhunnmai yaanathaal nal aayanai
aaththuma naayakar aana ennaeyanai
paasa valaiyil kai thookkina naayanai
paksha modu kaaththa mukya sakaayanai
4.aachchariyamaana naesaththaip paasaththai
anpin thirumukaththai,ainthu kaayaththai
kaatchi tharum iru paathaththaip paaviyaik
kaithookki vitta karaththai, uriththaaka