• waytochurch.com logo
Song # 23306

parisutha paranae thuthi umakku பரிசுத்த பரனே துதியுமக்கு


பல்லவி
பரிசுத்த பரனே துதியுமக்கு
பரலோகம் விட்டவரே துதியுமக்கு! (2)
சரணங்கள்
1. நரர் சிறை விடுக்க, சுரர் புகழ் வெறுத்த
திருமறை முடிவே, துதியுமக்கு
திருச்சித்தம் செய்ய நரரூபாய் வந்தவா
கருணையின் கடலே துதியுமக்கு – பரி
2. தலைதானும் வைக்க நிலையின்றித் திரிந்தாய்
நிலையே, நிதியே, துதியுமக்கு
கெத்சமனேயிலதி துயர் கொண்டாய்
அதிசய அன்பே துதியுமக்கு – பரி
3. அன்னாவின் மனையில் கன்னத்திலறைய
சின்னப்பட்டவரே துதியுமக்கு
முகத்தினில் துப்பி முதுகினிலடித்த
பகைவர்க்கு மன்னித்தாய், துதியுமக்கு – பரி
4. நெடுங்குருசேறி கடுந்துயர் கொண்டு
மடிந்த என் சிரசே, துதியுமக்கு
மரணத்தை வென்ற காரணத்தால் இந்த
தருணத்தில் மிகுந்த துதியுமக்கு – பரி

pallavi
parisuththa paranae thuthiyumakku
paralokam vittavarae thuthiyumakku! (2)
saranangal
1. narar sirai vidukka, surar pukal veruththa
thirumarai mutivae, thuthiyumakku
thiruchchiththam seyya nararoopaay vanthavaa
karunnaiyin kadalae thuthiyumakku – pari
2. thalaithaanum vaikka nilaiyintith thirinthaay
nilaiyae, nithiyae, thuthiyumakku
kethsamanaeyilathi thuyar konndaay
athisaya anpae thuthiyumakku – pari
3. annaavin manaiyil kannaththilaraiya
sinnappattavarae thuthiyumakku
mukaththinil thuppi muthukinilatiththa
pakaivarkku manniththaay, thuthiyumakku – pari
4. nedunguruseri kadunthuyar konndu
matintha en sirase, thuthiyumakku
maranaththai venta kaaranaththaal intha
tharunaththil mikuntha thuthiyumakku – pari

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com