Parama Seanai Kondadinaar பரம சேனை கொண்டாடினார்
பல்லவி
பரம சேனை கொண்டாடினார்; பரன் இரக்கத்தைப்
பாடினார்.
சரணங்கள்
1. பரத்திலே இருந்து பதி பெத்தலேம் வந்து,
பரன் நரரூபணிந்து பணிவானதில் சிறந்து, – பரம
2. இரவின் இருளை மாற்றி, இடையர் மனதைத் தேற்றி,
கிருபைப் பரனைப் போற்றி, கிறிஸ்தின் பிறப்பைச் சாற்றி, – பரம
3. சர்ப்பப்பேயை வென்று, சகலர்க் கேய நன்று
அற்புதமாக இன்று அத்தன் பிறந்தார் என்று, – பரம
pallavi
parama senai konndaatinaar; paran irakkaththaip
paatinaar.
saranangal
1. paraththilae irunthu pathi peththalaem vanthu,
paran nararoopanninthu pannivaanathil siranthu, – parama
2. iravin irulai maatti, itaiyar manathaith thaetti,
kirupaip paranaip potti, kiristhin pirappaich saatti, – parama
3. sarppappaeyai ventu, sakalark kaeya nantu
arputhamaaka intu aththan piranthaar entu, – parama