Paranae Paraporulae Nithya பரனே பரப்பொருளே நித்ய
பரனே பரப்பொருளே நித்ய பாக்கியானே சதய வாக்கியனே,
நரரான பாவிகட்காய் இந்த நானிலத்தில் வந்த வானவனே! – பரனே
2.காவில் அதம் ஏவை தேவ கற்பனை மறீனதால் உலகில்
மேவிய பாவம் அற பொல்லா வெஞ்சினக் கூளியின் வஞ்சமற – பரனே
3.வேறோர் மலர்க்காவில் சென்று வேதனைப் போற்றி மனம் நொறுங்கி
ஆறாக் கொடுந் துயரம் உந்த்ன் ஆத்துமத்தில் வரலானதுவோ? – பரனே
4.ஈராறு சீடர்களில் பண இச்சை மிகுந்த ஒரு சீடன்
பேர் யூதாஸ்காரி யோத்தாம் அவன் பேசினதின்படி காசு பெற்று – பரனே
5.ஓசன்னாரின் கும்புகளை அழைத் தோடிவந்தே உம்மை நாடி வந்தே
கன்னத்தில் முத்தமிட்டே உம்மைக் காட்டிக் கொடுக்கத் துணிந்தானோ? – பரனே
6.காட்டிக் கொடுத்திடவும் அந்த காதகராகிய பாதகர் கை
போட்டே பிடித்திடவும் பின்னும் பொற்கரங் கட்டி இழுத்திடவும் – பரனே
7.செம்புருவையைப் போலே கூடச் சென்றிடக் காய் பாமுன் நின்றிடவும்
அம்பரனே உந்தனுக்கு இந்த ஆபத்து வந்த தென் பாவம் அல்லோ ? – பரனே
paranae parapporulae nithya paakkiyaanae sathaya vaakkiyanae,
nararaana paavikatkaay intha naanilaththil vantha vaanavanae! – paranae
2.kaavil atham aevai thaeva karpanai mareenathaal ulakil
maeviya paavam ara pollaa venjinak kooliyin vanjamara – paranae
3.vaeror malarkkaavil sentu vaethanaip potti manam norungi
aaraak kodun thuyaram unthn aaththumaththil varalaanathuvo? – paranae
4.eeraatru seedarkalil pana ichchaை mikuntha oru seedan
paer yoothaaskaari yoththaam avan paesinathinpati kaasu pettu – paranae
5.osannaarin kumpukalai alaith thotivanthae ummai naati vanthae
kannaththil muththamittae ummaik kaattik kodukkath thunninthaano? – paranae
6.kaattik koduththidavum antha kaathakaraakiya paathakar kai
pottae pitiththidavum pinnum porkarang katti iluththidavum – paranae
7.sempuruvaiyaip polae koodach sentidak kaay paamun nintidavum
amparanae unthanukku intha aapaththu vantha then paavam allo ? – paranae