Nesa Yesuvae Neeare En Nal Nanbar நேச இயேசுவே நீரே என் நல் நண்பர்
1. நேச இயேசுவே நீரே என் நல் நண்பர்!
ஆதலால் பாவம் யாவும் வெறுக்கிறேன்
பிராண நாதரே நீரே என் நல் மீட்பர்!
முன்னிலும் இப்போ உம்மை நேசிக்கிறேன்
2. என்னை மீட்கக் குருசில் நீர் தொங்கினீர்
அதனாற்றான் உம்மை நான் நேசிக்கிறேன்
நான் கிரீடம் பெற நீர் முண்முடி சூண்டீர்
முன்னிலும் இப்போ உம்மை நேசிக்கிறேன்
3. துன்பமோ இன்பமோ உம்மை நான் விடேன்
ஜீவன் போமட்டும் உம்மையே போற்றுவேன்
மரணம் நெருங்கினாலும் நான் சொல்வேன்!
முன்னிலும் இப்போ உம்மை நேசிக்கிறேன்
4. சதாகால ஆனந்த மோட்சம் சேர்வேன்
அங்கே கீதம்பாடி உம்மைப் போற்றுவேன்
மின்னிடும் கிரீடம் வைத்து நான் பாடுவேன்
முன்னிலும் இப்போ உம்மை நேசிக்கிறேன்
1. naesa yesuvae neerae en nal nannpar!
aathalaal paavam yaavum verukkiraen
piraana naatharae neerae en nal meetpar!
munnilum ippo ummai naesikkiraen
2. ennai meetkak kurusil neer thongineer
athanaattaாn ummai naan naesikkiraen
naan kireedam pera neer munnmuti soonnteer
munnilum ippo ummai naesikkiraen
3. thunpamo inpamo ummai naan vitaen
jeevan pomattum ummaiyae pottuvaen
maranam nerunginaalum naan solvaen!
munnilum ippo ummai naesikkiraen
4. sathaakaala aanantha motcham servaen
angae geethampaati ummaip pottuvaen
minnidum kireedam vaiththu naan paaduvaen
munnilum ippo ummai naesikkiraen